வாஷிங்டன்: மாயமான பத்திரிகை யாளர் ஜமால் காஷோகி குறித்து சவூதி அரேபியா கூறி வந்த பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மூடி மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். "இந்தக் கொலையைத் திட்ட மிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்," என்றும் அவர் தெரிவி த்தார்.
சவூதியின் முக்கிய பங்காளி யான அமெரிக்கா, அந்நாட்டுக்கு அதிக நெருக்கடிகள் கொடுக்கப் பட வேண்டும் என்று கூறியது. வாஷிங்டன் வெள்ளை மாளி கையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "இந்தக் கொலை மிக மோசமாக அரங் கேற்றப்பட்டுள்ளது. இதை மோசமா க மறைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார். இதற்கிடையே, இந்தப் படு கொலைக்குப் பொறுப்பானவர்க ளின் 'விசா'க்களை ரத்துசெய்ய அமெரிக்கா சூளுரைத்துள்ளது.
சவூதி பேரரசர் சல்மானும் (வலக்கோடி) பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் (வலமிருந்து 2வது) ஜமால் காஷோகியின் மகன் சாலாவையும் (இடக்கோடி) உறவினர் சஹேலையும் நேற்று முன்தினம் சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் சந்தித்து காஷோகியின் மரணத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். படம்: இபிஏ

