காஷோகியின் மகன் சவூதியிலிருந்து அமெரிக்கா வந்து சேர்ந்தார்

காஷோகியின் மகன் சவூதியிலிருந்து அமெரிக்கா வந்து சேர்ந்தார்

1 mins read
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: படுகொலை செய்யப் பட்ட பத்திரிகையாளர் காஷோ கியின் மூத்த மகன் சவூதி அரேபி யாவிலிருந்து குடும்பத்துடன் புறப் பட்டு நேற்று அமெரிக்கா வந்து சேர்ந்தார். சவூதி அரசாங்கத்தை காஷோகி கடுமையாக விமர்சித்ததால் அவரது மகனான சாலே காஷோகி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை விலக்கிக் கொள் ளப்பட்டதால் சாலே அமெரிக்காவுக் குச் சென்றுள்ளார். முன்னதாக பட்டத்து இளவரசர் முஹமட் பின் சல்மானை சாலே சந்தித்துக் கைகுலுக்கும் படம் வெளியிடப்பட்டது.

இளவரசர் தமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது சவூதி மன்னரும் உடன் இருந்தார். மூன்று வாரங்களுக்கு முன்பு இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் பத்திரிகையாளர் காஷோகி படுகொலை செய்யப் பட்டார். ஆனால் தூதரகத்தில் நுழைந்த காஷோகி வெளியே வந்துவிட்டார் என்று சவூதி தெரி வித்தது. பின்னர் காஷோகி கொல்லப் பட்டதை சவூதி ஒப்புக்கொண்டது.

தூதரகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் அவர் கொல்லப்பட்டதாகவும் அது கூறியது. இதனை திட்டமிட்ட கொலை என்று சவூதி அரேபிய அரசு வழக்கறிஞர் அண்மையில் கூறி யிருந்தார். சவூதியின் சில போக்கிரி முகவர்கள் இந்தக் காரியத்தை செய்திருக்கலாம் என்றும் சவூதி அரேபியா அதி காரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.