போலிசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல்

போலிசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானில் போலிசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் இரண்டு அதிகாரிகள், மூன்று ஊழியர்கள் என மொத்தம் ஐவர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.