நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாலுவில் புதிய நெருக்கடி

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலு நகரத்தை உலுக்கிய நில நடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து இப்போது அங்கு சுகாதார நெருக் கடி நிலை ஏற்பட்டுள்ளது. பாலுவில் பெய்துவரும் தொடர் மழையால் மலேரியா, டெங்கிக் காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக நிவாரண உதவி வழங்கும் அமைப்புகள் எச்சரித்துள்ளன. கடந்த மாதம் 28ஆம் தேதி பாலுவை ரிக்டர் அளவில் 7.5 எனப் பதிவான நிலநடுக்கம் உலுக் கியது. அதையடுத்து ஏற்பட்ட சுனா மியில் 2,100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 220,000 பேர் வசிப்பி டமில்லாமல் தவித்து வருகின்றனர். பலமான நிலநடுக்கத்தினால் பூமி புதைகுழியைப்போல் மாறி பல குடியிருப்புகள் அதன் உள்ளே இழுத்துக்கொள்ளப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பாலுவில் பெரிதும் பாதிப்பு அடைந்த பகுதி களில் நோய் பரவு வதைத் தவிர்க்க இந்தோனீசிய அதிகாரிகள், ஹெலிகாப்டர்களிலிருந்து கிரு மிநாசினியைத் தெளித்து வருகின்ற னர். நோய் பரவக் காரணமாகும் ஈக்கள், எலிகள், கரப்பான் பூச் சிகள் ஆகியவற்றின் இனப்பெருக்க த்தை வேரோடு அழிக்க இந்த முயற்சி கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சினை கொண்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. அடுத்த சில மாதங்களுக்குத் தொடர்ந்து பெய்யவுள்ள பருவ மழையால் இந்நிலை மேலும் மோசம டையக்கூடும் என்று முன்னுரைக்க ப்பட்டுள்ளது.