வட்டார நிலைத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளது - அமெரிக்க தற்காப்பு அமைச்சர்

வட்டார நிலைத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளது - அமெரிக்க தற்காப்பு அமைச்சர்

2 mins read

மனாமா: சவூதி அரேபிய அதி ருப்தி பத்திரிகையாளர் ஜமால் காஷோகி படுகொலை விவகாரம் போன்ற சம்பவங்கள் மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலைத்தன் மைக்கு ஊறு விளைவிப்பதாகவும் இவற்றுக்குப் பொறுப்பானவர் களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க தற் காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் வா‌ஷிங்டன் போஸ்ட் நாளிதழில் தலையங்கக் கட்டுரைகளை எழுதி வந்த காஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம், சவூதியின் மேற்கத்திய நட்பு நாடுகளிடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனா ல் உலகின் ஆகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதிக்கு கடும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரானின் செல்வாக்கிற்கு எதிராக அமெரிக்கா ஆதரவ ளிக்கும் வட்டார கூட்டணியின் இணைப்பு சக்தியாக சவூதி திகழ்கி றது. இருப்பினும், காஷோகி விவகாரத்தினால் மேற்கத்திய நாடுகளுடன் ரியாத் கொண்டு இருக்கும் உறவுகள் கசப்படைந்து உள்ளன.

இந்த விவகாரத்தில் முழு விசா ரணை நடத்தப்படுவதைத் தாம் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்ன தாக கூறியிருந்தார். "சவூதி துணைத் தூதரகத்தில் ஜமால் காஷோகி கொலை செய்யப் பட்டிருப்பது நமக்கெல்லாம் கவலை தரக்கூடிய ஒரு விஷயம்," என்று மேட்டிஸ் கூறினார். பஹ்ரைன் தலைநகர் மனா மாவில் நேற்று நடைபெற்ற வருடா ந்திர பாதுகாப்பு மாநாடு ஒன்றில் அவர் உரையாற்றியபோது இத னைத் தெரிவித்தார். "அனைத்துலக ஒழுக்க நெறி களுக்கு ஒத்துப்போக எந்தவொரு நாடும் தவறும்போது வட்டார ரீதியில் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்கப்படுகிறது," என்றார் மேட்டிஸ்.