ஜகார்த்தா: லஞ்ச வழக்குத் தொடர்பாக பனை எண்ணெய் நிறுவன உயரதிகாரி ஒருவர் உட்பட எழுவரை இந்தோனீசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 'கோல்டன் அக்ரி ரிசோர்சஸ்' நிறுவனத்தின் இரு துணை நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் அதில் அடங்குவர். பனைக் காடுகளை அமைப்பதற்கான அனுமதி பெற்றதிலும் போர்னியோ தீவில் உள்ள செம்புலு ஏரி அருகே கழிவுகளைக் கொட்டியது தொடர்பிலும் விசாரணையைத் தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜகார்த்தா: லஞ்ச வழக்குத் தொடர்பாக அதிகாரிகள் எழுவர் கைது
1 mins read

