கோலாலம்பூர்: கோலா சிலாங்கூர் வட்டாரத் திற்கான பிகேஆர் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று தேர்தல் நடக்க இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நடைபெறவில்லை. இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெற இருந்த கோலா சிலாங்கூர் விளையாயாட்ட ரங்கின் பார்வையாளர் பகுதியில் மின்னிலக்கக் கருவிகளின் செயல்பாடுகளை முடக்கும் 'ஜாமர்' கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தலை முடக்கச் சதி இடம்பெற்றுள்ளது எனச் சந்தேகிப்பதாகக் கூறி கோலா சிலாங்கூர் பிகேஆர் கட்சியின் இளையரணித் தலைவர் ஆர்.சபாபதி போலிசில் புகார் அளித்துள்ளார்.
அக்கருவியில் ஆறு 'ஆன்டெனாக்கள்' இருந்ததாகவும் அதன்மீது '4ஜி', 'வைஃபை' என எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. "இணைய சேவை முடக்கப்பட்டதால் தகுதி உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்த முடியாமல் போனது," என்று திரு சபாபதி அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தேர்தல் தேதியைக் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று கோலா சிலாங்கூர் தேர்தல் குழுத் தலைவர் அஸ்மிரா இப்ராகிம் தெரிவித்துள்ளார். "
இணைய சேவை தொடர்பான பிரச்சினை களால் இன்று (நேற்று) நடக்கவிருந்த மின் னணு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது,' என்றார் அவர். 'இ=-வோட்டிங்' முறை மூலம் அக்கட்சியின் 17,737 உறுப்பினர்கள் வாக் களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதனிடையே, கைப்பற்றப்பட்டது உண்மை யிலேயே 'ஜாமர்' கருவிதான் என்பதை போலிஸ் அதிகாரி முகம்மது அஸ்ரி உறுதிப் படுத்தியுள்ளார்.

