பியோங்யாங்: வடகொரியாவில் சிறைவாசம் அனுபவித்தபோது அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சித்திரவதைக்கு ஆளா னதாகவும் அதுவே அவர் உயிர் இழக்கக் காரணம் என்றும் அமெ ரிக்கா குற்றம் சாட்டியிருப்பதை வடகொரியா மறுத்துள்ளது. ஓராண்டிற்கும் மேலாக வட கொரியச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 22 வயது வார்ம்பியர், கடந்த 2017ஆம் ஆண்டு சுய நினைவற்ற நிலையில் விடுவிக்கப் பட்டார். ஆனாலும், அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்திற்குள்ளா கவே அவர் இறந்துபோனார். அவரது மரணத்திற்கான கார ணம் இன்னும் உறுதியாகத் தெரி யாத நிலையில், வடகொரியாவில் அவர் சித்திரவதைக்கு ஆளான தாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், வார்ம்பியருக்குச் சிகிச்சை அளித்த 'பியோங்யாங் ஃபிரண்ட்ஷிப்' மருத்துவமனை யின் இயக்குநர், அந்தக் குற்றச் சாட்டுகளைக் கடுமையாகச் சாடிய தோடு, அது 'உண்மைகளைச் சிதைக்கும் முயற்சி' என்றும் தெரிவித்துள்ளதாக வடகொரியா வின் அதிகாரபூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறுகிறது. வார்ம்பியர் விடுவிக்கப்பட்ட போது அவரது உடல்நிலைக் கார ணிகள் அனைத்தும் இயல்புநிலை யில் இருந்ததாக ஒத்துக்கொண்டு, அமெரிக்க மருத்துவர்கள் கடிதம் அளித்தனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
வடகொரியா சித்திரவதை செய்து தங்கள் மகனைக் கொன்று விட்டதாக வார்ம்பியரின் பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர். வடகொரியா சென்றிருந்தபோது தாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பிரசார சுவரொட்டியைத் திருடியதாகக் கூறி வார்ம்பியருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அமெரிக்கா=வடகொரியா இடை யிலான பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

