லெஸ்டர்: இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான லெஸ்டர் சிட்டிக்குச் சொந்தமான கிங் பவர் மைதானத்துக்கு வெளியே ஹெலி காப்டர் ஒன்று விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதில் அந்தக் காற் பந்துக் குழுவின் உரிமையாளரான தாய்லாந்து செல்வந்தர் விச்சை ஸ்ரீவர்த்தனபிரபா இருந்தார் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. வெஸ்ட்ஹேம் குழுவுடன் நேற்று முன்தினம் லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு விளையாடி கிட் டத்தட்ட 45 நிமிடங்கள் கழித்து இவ்விபத்து நிகழ்ந்ததாக அறியப் படுகிறது.
அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் பிரச் சினை ஏற்பட்டதாகவும் பின்னர் அருகிலுள்ள கார் நிறுத்துமிடத் தில் அது விழுந்து தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து நேரப்படி நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் ஸ்ரீவர்த்தனபிரபா இருந்ததாக அந்தக் குடும்பத்துக்கு நெருக்க மான ஒருவர் கூறியதாக பிபிசி செய்தி கூறுகிறது. "கிங் பவர் மைதானத்தில் நிகழ்ந்த ஒரு பெரிய சம்பவம் தொடர்பாக லெஸ்டர்ஷியர் போலிஸ், அவசரகால சேவை வழங்குவோ ருக்கு உதவி புரிந்து வருகிறோம். மேற்கொண்டு தகவல்கள் கிடைத் ததும் இது பற்றிய விரிவான அறிக்கையை காற்பந்துக் குழு வெளியிடும்," என்று லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் பேச் சாளர் டுவிட்டரில் தெரிவித்தார்.
ஸ்ரீவர்த்தனபிரபாவின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் 3.3 ($4.5 பில்லியன்) என்று கூறப்படுகிறது. லெஸ்டர் குழுவில் பல மில்லி யன் டாலரை முதலீடு செய்து உள்ள ஸ்ரீவர்த்தனபிரபா, பல சூழ் நிலைகளில் லெஸ்டர் குழு சொந்த மைதானத்தில் விளையாடுவதைப் பார்த்துவிட்டு தமது ஹெலிகாப் டரில் திரும்பிச் செல்வது வழக்கம்.

