அமெரிக்க ஆதரவுப் படையினர் 41 பேரைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

அமெரிக்க ஆதரவுப் படையினர் 41 பேரைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

1 mins read
Google News Preferred Icon

டமாஸ்கஸ்: ஈராக் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹிஜான் பகுதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆதரவுப் படையினர் 41 பேரை அவர்கள் கொன்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய ஜனநாயகப் படையினர் மீது எதிர்த் தாக்குதல் நடத்தும் வகையில் கடந்த வெள்ளிக் கிழமை தற்கொலைப் படையினரை ஐஎஸ் ஏவிவிட்டது என்று பிரிட்டனைச் சேர்ந்த 'சிரியன் அப்சர்வேட்டரி' எனும் மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது. அமெரிக்க ஆதரவுடன் விமானத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த அந்த சிரிய படை வீரர்கள் அன்றிரவுக்குள் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.