பெய்ஜிங்: ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து

1 mins read

பெய்ஜிங்: பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கார் மீது மோதி, 60 மீட்டருக்குக் கீழே இருந்த ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது இருவர் பலியாகினர். சீனாவின் சொங்சிங் நகரில் நேற்றுக் காலை பத்து மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது. நான்கு தடங்கள் கொண்ட அந்தப் பாலத்தில் போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் கார் வந்ததே விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.