விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்ததால் பயணிகள் பாதிப்பு

விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்ததால் பயணிகள் பாதிப்பு

1 mins read

பினாங்கு: கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் பினாங்கு அனைத்துலக விமான நிலைய புறப்பாட்டுப் பகுதியில் நேற்றுக் காலை வெள்ளநீர் புகுந்தது. கணுக்கால் உயரத்திற்கு நீர் தேங்கி நின்றதால் 28 பயணிகள் தங்களது காலணிகளைக் கழற்றி நடந்து சென்று விமானத்தில் ஏறினர். வழக்கத்திற்கு மாறாக 90 நிமிடங்களில் 48 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறிய விமான நிலைய அதிகாரி ஒருவர், விமானம் கிளம்பச் சிறிது நேரமே இருந்ததால் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்.