கலிதா ஸியாவுக்கு ஏழு ஆண்டு சிறை

கலிதா ஸியாவுக்கு ஏழு ஆண்டு சிறை

1 mins read

டாக்கா: பங்ளாதேஷ் நாட்டின் முன் னாள் பிரதமர் கலிதா ஸியாவுக்கு (படம்) நேற்று மேலும் ஏழு ஆண் டுகள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தித் தம் கணவர் பெயரிலுள்ள அறக்கட்டளைக்குப் பல லட்சம் டாலர் நன்கொடை பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில் டாக்கா சிறப்பு நீதிமன் றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் கலிதா ஸியாவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக தொடுக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது 73 வயது கலிதா ஸியா நீதிமன்றத் துக்கு வரவில்லை. நீதி கிடைக் காது என்று கூறிய அவரின் வழக் கறிஞர்களும் வழக்கு விசாரணை யில் கலந்துகொள்ளவில்லை. முன்னதாக தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஸியாவின் கோரிக்கையையும் நீதி மன்றம் நிராகரித்துவிட்டது. ஸியா ஏற்கெனவே மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனு பவித்து வருகிறார். இம்மாதம் முற்பகுதியில் அவர் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். கலிதா ஸியா பல்வேறு சுகாதாரப் பிரச் சினைகளால் பாதிக்கப்பட்டு உள் ளதாகக் கூறப்படுகிறது. இரு வழக்குகளும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று ஸியாவின் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் பங்ளாதேஷ் நாட்டில் இவ்வாண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.