புத்ரா ஜெயா: சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அப்துல்அஸிஸ் அல் சவுட் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுவை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பிதழ் பெர்டானா புட்ரா வில் நேற்று நடைபெற்ற ஒரு கூட் டத்தின்போது ராஜ தூதரின் கைப் படக் கொடுக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுவாக்குவதன் அடிப் படையில் இந்த அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.
தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட டாக்டர் மகாதீர் தமக்கு தற்சமயம் அதிக வேலைகள் உள்ளதாகவும் இச்சந்திப்பிற்காக சரியான நேரத்தை நிர்ணயிப்பார் என்றும் தெரிவித்துக்கொண்டார்.

