காஷோகி வழக்கு விசாரணை; இஸ்தான்புல்லில் சவூதி அரேபிய அரசு வழக்கறிஞர்

காஷோகி வழக்கு விசாரணை; இஸ்தான்புல்லில் சவூதி அரேபிய அரசு வழக்கறிஞர்

1 mins read
Google News Preferred Icon

இஸ்தான்புல்: மூன்று வாரங் களுக்கு முன் இஸ்தான்புல் லில் உள்ள சவூதி தூதரகத் தில் கொல்லப்பட்ட செய்தி யாளர் ஜமால் காஷோகி கொலை வழக்கு விசாரணைக் காக சவூதியின் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் இஸ்தான் புல் வந்து சேர்ந்திருக்கிறார். இவர் இஸ்தான்புல்லின் தலைமை வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசுவார் என்றும் அவர்களின் சந்திப்பின்வழி பல பதில்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரிசப் தயிப் எர்டோகன் கூறியுள்ளார். அத்துடன் சவூதி வழக் கறிஞர் காஷோகி கொல்லப் பட்ட தூதரகத்தையும் நேரில் சென்று சவூதி வழக்கறிஞர் ஆய்வு செய்வார் என்றும் அனடொலு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதன் தொடர்பில் காஷோகியின் மரணம் திட்டமிட்ட கொலை என்று கூறப்படுகிறது.