அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இலங்கைக்கு வலியுறுத்து

அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இலங்கைக்கு வலியுறுத்து

1 mins read

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அரசியல் சாசனத்தை நிலை நாட்டவேண்டும் என்றும் நாடாளு மன்றத்தை முடக்கியதை மீட்டுக் கொள்ளவேண்டும் என்றும் அந் நாட்டு அதிபர் மைத்திரிபால சிறி சேனவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

பிரதமர் பதவியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார் சிறிசேன. ஆனால், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப் பினர்களைக் கலந்தாலோசிக்கா மல் அதிபர் தன்னிச்சையாக முடி வெடுத்தது செல்லாது என்றும் தான் பிரதமர் பதவியில் நீடிக்கி றேன் என்றும் விக்ரமசிங்கே கூறி வந்தார்.

இந்நிலையில், பெட்ரோலியத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க நேற்று முன்தினம் அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது மோதல் உருவானது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்; மேலும் இருவர் காயமடைந்தனர்.