அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணி

அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணி

1 mins read
a5c53286-e165-426b-93e7-a76fd332352f
-

பாண்டுங்: இந்தோனீசிய நிதி அமைச்சில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அதிர்ஷ்டகரமாக உயிர் தப்பியுள்ளார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் விமான நிலையத்துக்கு வர முடியாததால் அவர் விமானத்தை தவறி விட்டார். அவர், தவறவிட்ட அந்த 'லயன் ஏர்' விமானம்தான் விபத்துக்குள்ளாகி 189 பேர் கொல்லப்பட்டனர். விமானம் விபத்தில் சிக்கியதை கேள்விபட்ட பொதுச்சேவை ஊழியரான சோனி செட்டிய வானுக்கு இன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.

விமானத்தைப் பிடித்து திங்கட் கிழமை அன்று பணிக்குத் திரும்பி விட வேண்டும் என்ற மும்முரத்தில் அவர் இருந்தார். ஆனால் திங்கள் காலை வழக்கத்திற்கு மாறாக போக்கு வரத்து நெரிசல் மோசமாக இருந்தது. இதனால் உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்குள் அவர் விமான நிலையத்துக்கு வந்து சேர முடியவில்லை. அந்த நேரத் தில்தான் விபத்துக்குள்ளான விமானம் காலை 6.20க்கு புறப் பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அதாவது 6.33 மணிக்கு விமானத் தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே காலை 9.40 மணி விமானத்துக்கான டிக் கெட்டை வாங்கிய சோனி காலை 10.45 மணிக்கு பங்கல்பினாங் வந்து சேர்ந்துவிட்டார்.

உயிர் தப்பிய சோனி செட்டியவான். படம்: ஏஎஃப்பி