'காஷோகி கொல்லப்பட்டதற்கு சவூதிதான் பொறுப்பு'

'காஷோகி கொல்லப்பட்டதற்கு சவூதிதான் பொறுப்பு'

1 mins read
cd5f2eb9-2d72-413b-8b14-a1f806a60fba
-

லண்டன்: சவூதி பத்திரி கையாளர் காஷோகி கொல்லப் பட்டதற்கு சவூதி அதிகாரி களுக்கே பொறுப்பு உள்ளது என்றும் அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் காஷோகியின் காதலி ஹாட்டிஸ் செங்கிஸ் ஆவேசத்துடன் கூறி யுள்ளார். வா‌ஷிங்டன் போஸ்ட் கட்டு ரையாளரும் பட்டத்து இளவரசர் முஹமட் சல்மானின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவருமான காஷோகியின் மரணம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் சவூதி அரேபியாவை நெருக் கடியில் தள்ளியது. இதற்கிடையே துருக்கியில் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய காஷோகியின் காதலி ஹாட்டிஸ் செங்கிஸ், "சவூதி தூதரகத்தில் கொலை நடந் துள்ளது. இதனால் சவூதி அதி காரிகளே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்," என்றார்.