சிங்கப்பூருடனான மலேசியாவின் தண்ணீர் ஒப்பந்தம் பற்றி சிங்கப்பூர் பயணத்தின்போது மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது விவாதிப்பார் என மலேசிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் மர்ஸுக்கி யாஹ்யா கூறியுள்ளார். இம்மாதம் 11 முதல் 15ஆம் தேதி வரை சிங்கப்பூரில் 33வது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள டாக்டர் மகாதீர் சிங்கப்பூர் வருவார் என்று கூறப் பட்டது.
சிங்கப்பூருக்கு மலேசியா விற்கும் சுத்திகரிக்கப்படாத நீரின் விலை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதில் மலேசிய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக வும் அது பற்றி இம்மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூருடன் விவாதிக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார். "நமது கடப்பாட்டைத் தொடர் வோம். மலேசிய அரசாங்கம் விரும்பும் விலையை சிங்கப்பூரிடம் இருந்து பெற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகுந்த வலுவளிக்கும் என நம்புகிறேன்," என்று திரு மர்ஸுக்கி நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

