பாகிஸ்தானில் கிறிஸ்துவப் பெண் 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

1 mins read

இஸ்லாமாபாத்: சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரு கிறிஸ்துவப் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அசியாவை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சமய சுதந்திரத்திற்கான மனித உரிமை ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அசியா தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் அசியாவுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் சைபுல் தெரிவித்துள்ளார்.