'பிரச்சினையைப் பார்த்தால் இந்நேரம் நான் இறந்திருக்க வேண்டும்'- டாக்டர் மகாதீர்

'பிரச்சினையைப் பார்த்தால் இந்நேரம் நான் இறந்திருக்க வேண்டும்'- டாக்டர் மகாதீர்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர், தமக்கு 93 வயதாகிவிட்டது என்பதை இப்போதெல்லாம் உணரத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார். இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற பிறகு சீனாவுடனான பிரச்சினைகளை சமாளிப்பது முதல் நாட்டின் கடனை திருப்பிச் செலுத்துவது வரையிலான பல பிரச்சினைகளுடன் போராட வேண்டியிருப்பதாக திரு மகாதீர் கூறினார். ஏஎஃப்பி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் "இருக்கும் பிரச்சினைகளைப் பார்த்தால் நான் இந்நேரம் இறந்திருக்க வேண்டும்," என்று நகைச்சுவையாக சொல்லி சிரித்தார். திரு மகாதீர் தனது கருத்தை எப்போதுமே வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என்ற பெயரைப் பெற்றவர்.