மகாதீரின் ஆலோசகருடன் தொடர்புகொண்ட ஜோ லோ

மகாதீரின் ஆலோசகருடன் தொடர்புகொண்ட ஜோ லோ

1 mins read

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் தேடப்படும் வணிகர் ஜோ லோ சென்ற வாரம் மலேசியப் பிரதமர் மகாதீரின் உயர் ஆலோசகருடன் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டாக்டர் மகாதீரின் ஆலோசகர் டாயிம் ஜைனுதின், ஜோ லோ தன்னிடம் நேரடியாகப் பேசவில்லை என்றும் தனது அதிகாரி ஒருவரிடமே அவர் பேசியதாகவும் கூறியுள்ளார். பிரதமர் மகாதீரையும் உயர் ஆலோசகர் டாயிம் ஜைனுதினையும் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஜோ லோ கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஜோ லோ நாடு திரும்ப வேண்டும் என்றும் 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றும் டாயிம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், தங்களுக்குக் கிடைத்த ஆகக் கடைசித் தகவல்படி ஜோ லோ இருக்கும் இடத்தை தாங்கள் அறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.