ரணில் மீண்டும் பிரதமரானால் அதிபர் பதவியைத் துறப்பேன்: சிறிசேன அதிரடி

ரணில் மீண்டும் பிரதமரானால் அதிபர் பதவியைத் துறப்பேன்: சிறிசேன அதிரடி

1 mins read

பிரதமர் பதவியிலிருந்து அகற்றப் பட்ட ரணில் விக்ரமசிங்கே மறு படியும் அப்பொறுப்பில் அமர்த்தப் பட்டால் ஒரு மணி நேரம்கூட அதிபராக நீடிக்கமாட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக அறிவித்து உள்ளார். இரண்டு வாரங்களுக்குமுன் இலங்கையின் அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியது. ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார் சிறிசேன. அத்துடன், இம்மாதம் 16ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தும் அவர் உத்தர விட்டிருந்தார்.

அவரது இம்முடிவு சட்டவிரோ தமானது எனக் குறிப்பிட்ட ரணில், தானே பிரதமராக நீடிப்ப தாகவும் கூறி வந்தார். ஆயினும், கடந்த திங்கட்கிழமை பிரதமருக்கான பொறுப்பு களைத் தொடங்கினார் ராஜபக்சே. அன்றே புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. ஆனாலும், நாடாளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக் கும் வரை, ரணில்தான் பிரதமர் என்று நாடாளுமன்ற நாயகர் கரு.ஜெயசூர்ய அதிபர் சிறிசேன வுக்குக் கடிதம் எழுதினார். மேலும், நாடாளுமன்றப் பணிகள் வழக்கம்போல் நடைபெற ஏதுவாக நாடாளுமன்ற முடக்க உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.