லயன் ஏர் விமான விபத்து; குரல் பதிவு கறுப்புப் பெட்டியைத் தேடும் முயற்சி தீவிரம்

லயன் ஏர் விமான விபத்து; குரல் பதிவு கறுப்புப் பெட்டியைத் தேடும் முயற்சி தீவிரம்

2 mins read

ஜகார்த்தா: 'லயன் ஏர்' விமானம் ஏன் கடலில் மோதி நொறுங்கியது என்பதற்கு விளக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு கறுப்புப் பெட்டியை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில் தொடர்ந்து நேற்று கடலில் மூழ்கிய முக்குளிப் பாளர்கள் விமான இருக்கைகள், சக்கரங்கள் உட்பட ஏராளமான சிதைவுகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கடந்த திங்கட்கிழமை அன்று ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட லயன் ஏர் விமானம் 13 நிமிடத் திற்குள்ளாகவே விபத்துக்குள் ளானது. இதில் விமானத்தில் இருந்த 189 பேரும் கொல்லப்பட்டனர். "விமானம் விழுந்த கடற் பகுதியில் இன்றும் மூழ்கி ஆராய்வோம்," என்று இந்தோனீசிய கடற்படையின் தேடி மீட்புப் பிரி வின் கமாண்டர் இஸ்வார்டோ சொன்னார். ஏராளமான சிதைவுகள் சிதறிக் கிடக்கின்றன.

விமானத்தின் சக் கரங்கள், இருக்கைகள் போன்றவை சுக்குநூறாக உடைந்து கிடக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். முக்குளிப்பாளர்கள் 25-35 மீட்டர் ஆழத்தில் மூழ்கி கடற் பரப்பில் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மிகவும் குறைவான உடற்பாகங்களே இதுவரை கிடைத்துள்ளன. அதே சமயத்தில் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான விமானப் பாகங்கள் மீட்கப்பட்டுள் ளன என்றார் அவர். இந்நிலையில் சிதைவுகளி லிருந்து மீட்கப்பட்டுள்ள கறுப்புப் பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், விமானியின் குரல் உள் ளிட்ட தகவல்கள் பதிவாகியுள்ள தால் விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரிய வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 90 விழுக்காடு விமான விபத்துகளில் இத்தகைய கறுப்புப் பெட்டிகள் உதவியிருப் பதாக விமானத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.