தோக்கியோ: பிரிட்டனில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய விமானி அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்திருந்தார் என்று லண்டன் போலிசார் தெரிவித்தனர். வரம்புக்கு மீறி ஏறக்குறைய பத்து மடங்குக்கு அதிகமாக அவர் மதுபானம் குடித்திருந்தார். சென்ற ஞாயிற்றுக்கிழமை துணை விமானியான கட்சுடோஷி ஜிட்சுகாவாவை, 42, கைது செய்த போலிசார், அவரிடம் ரத்த பரிசோதனை நடத்தினர். விமானம் புறப்படுவதற்கு முன்பு அன்று இரவு ஆறு மணி நேரத்தில் அவர் இரண்டு போத்தல் வைன் குடித்திருக்கலாம் என்றும் 1.8 லிட்டர் பீர் குடித்திருக்கலாம் என்றும் சோதனையில் தெரியவந்தது.
அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்த ஜப்பானிய விமானி கைது
1 mins read

