வாஷிங்டன்: இம்மாதம் பிற் பகுதியில் அர்ஜெண்டினாவில் 'ஜி20' மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அதிபர் டிரம்ப் சந்திக்கவிருக்கிறார். அப்போது சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தை வரையுமாறு அமைச்சரவைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 1ஆம் தேதி அதிபர் ஸியுடன் பேசியதைத் தொடர்ந்து சீனாவுடன் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் போடுவது குறித்து அதிபர் டிரம்ப் முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. டுவிட்டரில் வெளியிட்ட தக வலில் ஸியுடனான கலந்துரை யாடல் சிறப்பாகவும் வர்த்தகப் பேச்சு நல்ல திசையை நோக்கி நகர்ந்தது என்றும் டிரம்ப் குறிப் பிட்டார். புதிய ஒப்பந்தத்தை வரைய அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானதும் யுவான் நாணயத்தின் மதிப்பு நேற்று கூடியது.

