கோலாலம்பூர்: கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப் பான், டாக்டர் மகாதீர் தலைமையில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்நிலையில் முதல் முறையாக நேற்று வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த அந்த கூட் டணியின் நிதி அமைச்சர் லிம் குவான் எங், மாதம் 2,300 ரிங் கிட்டுக்குக் குறைவாக சம்பளம் ஈட்டுவோருக்கு முதல் முறையாக வீடு வாங்க உதவ அரசாங்கம் ஒரு பில்லியன் ரிங்கிட்டை ஒதுக் கீடு செய்துள்ளது என்று அறிவித்தார்.
150,000 ரிங்கிட் விலையுள்ள கட்டுப்படியாகக்கூடிய வீட்டை வாங்குவதற்கு உதவ மலேசிய வங்கிகளுடன் சேர்ந்து இந்த நிதி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். "2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஏஎம் பேங், சிஐஎம்பி பேங், மே பேங், ஆர்எச்பி பேங், பேங் சிம்பானான் நேஷனல் ஆகியவற்றில் இந்த நிதி 3.5% விகிதத்தில் கிடைக்கும்," என்று திரு குவான் எங் குறிப்பிட்டார்.
இதனால் மாதத் தவணைக் கான தொகை குறையும் என்றார் அவர். அதே வேளையில் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள வீட்டை முதல் முறையாக வாங்குவோருக்கு முதல் 300,000 ரிங்கிட்டுக்கு முத் திரை தாள் வரி விலக்கு அளிக்கப் படும். ஐயாயிரம் ரிங்கிட் வரை வீட்டு வருமானம் கொண்டவர்கள் வீடு வாங்க அரசு 25 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது என்று நிதி அமைச்சர் கூறினார். 'மலேசிய பொருட்களையே வாங்கு' இயக்கத்துக்காக இருபது மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொரு ட்கள், சேவைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த நட வடிக்கை இடம்பெறுகிறது.

