கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக நீக் கப்பட்ட முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலை வருமான ரணில் விக்ரமசிங்கே நாட்டில் ரத்தக்களரியைத் தவிர்க்க காலஅவகாசம் குறைந்து வருவ தாக எச்சரித்து இருக்கிறார். நாட்டில் அரசமைப்புச் சட்டத் திற்குப் படுமோசமான நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கு இனிவரும் நாட்களில் நாடாளு மன்றம் தீர்வு கண்டுவிடும் என் றும் திரு ரணில் நம்பிக்கை தெரிவித்தார். திரு ரணில், ஒரு வாரகாலத்திற்கும் மேலாக பிரத மரின் அதிகாரபூர்வ இருப்பிடத் திலேயே தங்கி இருந்து வருகிறார்.
அதேவேளையில், வெளியே அவரின் ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டுள்ளனர். இந்நிலையில் அவர் ஏஎஃப்பி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். இலங்கையில் தான் பதவி விலக்கப்பட்டதை அடுத்து மூண் டுள்ள அரசமைப்புச் சட்ட பாதிப்பு காரணமாக கொதிப்படைந்து போயிருக்கும் மக்கள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திவிடமுடியும் என்று திரு ரணில் குறிப்பிட்டார். "வன்செயல் வேண்டாம் என்று மக்களை நாங்கள் கேட்டுக்கொள் வோம். ஆனால் இத்தகைய ஒரு சூழலில் என்ன நடக்கும் என்பது தெரியாது," என்று ரணில் பேட்டி யில் தெரிவித்தார்.

