அன்வார்: கட்சித் தேர்தல் செயல்முறைகளை ஆராய சிறப்புக் குழு அமைக்கப்படும்

அன்வார்: கட்சித் தேர்தல் செயல்முறைகளை ஆராய சிறப்புக் குழு அமைக்கப்படும்

1 mins read

கோலாலம்பூர்: பிகேஆர் எனப் படும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியல் போன்ற முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வேளையில் கட்சித் தேர்தல் செயல்முறைகளை முழுமையாக ஆராய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். கெஅடிலான் கட்சித் தலைமைத்துவப் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்ட பின்னர் அத்தகைய குழுவை அமைக்க இருப்பதாக அன்வார் கூறினார். கெஅடிலான் கட்சி மாநாட்டின்போது செய்தியாளர் களிடம் அவர் இந்த விவரத்தை தெரிவித்தார்.

கட்சித் தேர்தல் நிபுணத்துவ மற்றும் திறமையான முறையில் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரு மான அவர் வலியுறுத்தினார். கெஅடிலான் கட்சி மாநாடு முடிந்த பின்னர் கட்சித் தேர்தல் செயல்முறைகளை ஒரு குழு அவசியம் ஆராய வேண்டும் என்று அன்வார் கூறினார். அக்குழு உரிய பரிந்துரை களை கட்தித் தலைமைத்துவத் திடம் தெரிவித்த பின்னர் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார். வான் அசிஸா பிரியாவிடை கெஅடிலான் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 20 ஆண்டுகளாக வழிநடத்திய வான் அசிஸா, நேற்று அப் பொறுப்பிலிருந்து விடை பெற்றார். கட்சி மாநாட்டில் உரை யாற்றிய வான் அசிஸா, தன் கணவர் அன்வார் சிறையில் அடைக்கப்பட்டபோது அனுப வித்த துயரங்களை கண்ணீர்மல்க நினைவு கூர்ந்தார்.