வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீடிக்கும் வர்த்தகப் பூசலைத் தணிக்க அமெரிக்காவுடன் ஓர் உடன்பாடு செய்துகொள்ள சீனா தயாராக இருப்பதால் அந்நாட்டின் மீது கூடுதலாக இறக்குமதி வரி விதிப்பு இனி தேவைப்படாது என்று அமெரிக்க அதிடர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பில் ஓர் உடன்பாடு செய்து கொள்ள சீனா விரும்புகிறது என்றும் அதற்காக சீனா செய்யத் தயாராக இருக்கும் விஷயங் களைப் பற்றி தங்களிடம் தெரி வித்திருப்பதாகவும் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
வர்த்தகப் பூசலுக்குத் தீர்வு காண ஓர் உடன்பாடு செய்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு அமெரிக்கா 250 பில்லியன் டாலர் (S$340 பில்லியன்) வரி விதித்துள்ளது. சீனாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கப் போவதாகவும் திரு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரி விதித்தது. இந்த வர்த்தகப் பூசலால் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க நிறுவனங்களும் விவசாயிகளும் புகார் செய்தனர். வர்த்தகப் பூசல் தணிய அமெரிக்காவும் சீனாவும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின.

