இலங்கை சமரச பேச்சு தோல்வி; நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

இலங்கையில் அரசமைப்புச் சட்ட நெருக்கடிக்குத் தீர்வுகாண மேற் கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி யில் முடிந்துவிட்டது. சென்ற மாதம் அரசமைப்புச்சட்டப் பிரச் சினை ஏற்பட்டதற்குப் பிறகு முதன்முதலாக அதிபர் சிறிசேன, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மூவரும் ஞாயிறன்று சந்தித்தனர். அந்த மூவரும் அதிபர் செயல கத்தில் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினர். உதவியாளர்கள், அரசியல் கட்சி களின் மூத்த தலைவர்கள் உடனி ருந்தனர். இருந்தாலும் பேச்சு வார்த்தை வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய அரசாங்கத்தை மறுபடியும் பதவியில் நியமிக்கும்படி ரணில் கோரியிருக்கிறார்.

ராஜ பக்சே, நாடாளுமன்றத்தில் தன் னுடைய பெரும்பான்மையை முடிந் தால் மெய்ப்பித்துக் காட்டட்டும் என்று அவர் சவால்விட்டு இருக் கிறார். இந்த நிலையில், நேற்று மூன்றாவது தடவையாக நாடாளு மன்றத்தில் யாருக்கு பெரும் பான்மை என்பதைக் கண்டுபிடிக்க வாக்கெடுப்பு நடக்கவிருந்தது. மன்றம் நேற்று பிற்பகல் கூடி யது. இம்மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் நடந்த ரகளைகள் குறித்து விசா ரணை வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரியது.

இருந்தாலும் கடைசியில் நாடாளுமன்றம் நவம்பர் 23ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப் பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமராக செயலாற்றியபோது ரணில் நாட்டு நலனைக் கவனத் தில் கொள்ளவில்லை என்று கூறி சென்ற மாதம் 26ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து அவரை அதிபர் நீக்கிவிட்டார். அதோடு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அவர் பிரதமராக நியமித்தார். ஆனால் அதை ரணில் ஏற்கவில்லை. இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இரண்டு தடவை ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர் மானம் வெற்றி அடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!