ஸின்ஜியாங்கின் 8.3 பில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி

ஸின்ஜியாங்கின் 8.3 பில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் மேற்கில் அமைந்துள்ள ஸின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் 42.1 பில்லியன் யுவான் (S$8.3 பில் லியன்) மதிப்புள்ள விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சீனாவின் பெரும் முயற்சியான வர்த்தகப் பாதைக்கு ஸின்ஜியாங் வட்டாரம் முக்கிய நிலையமாக அமையவிருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணி 2030ஆம் ஆண்டு வரை நடை பெறும். விமான விரிவாக்கப் பணி முடியும்போது ஆண்டுக்கு 63 மில் லியன் பயணிகளையும் 750,000 டன் சரக்குகளையும் ஸின்ஜியாங் கையாள முடியும்.

இந்த விரிவாக்கத்தில் இரண்டு கூடுதல் ரயில்வே பாதைகளும் அமைக்கப்படவுள்ளன. ஸின்ஜியாங்கில் சீனா முதலீடு செய்யும் தொகை, பெய்ஜிங்கின் புதிய மாபெரும் விமானத் திட்ட மான டேக்ஸிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு செல வாகும் தொகையில் பாதியாகும். பெய்ஜிங் விமானத் திட்டத் திற்கு 80 பில்லியன் யுவான் நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளது. கட்டுமானப் பணி நிறைவு பெற்ற பிறகு 2025ஆம் ஆண்டி லிருந்து ஆண்டுக்கு 72 மில்லியன் பயணிகளை பெய்ஜிங் விமான நிலையம் கையாள முடியும்.