வர்த்தகர்களின் ஆதரவை நாடும் தெரசா மே

வர்த்தகர்களின் ஆதரவை நாடும் தெரசா மே

1 mins read

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நகல் திட்டத்தை சமர்ப்பித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே தனது திட்டத்திற்கு வர்த்தகர் களின் ஆதரவை நாடியுள்ளார். "குடியேற்றம் திறமையின் அடிப்படையிலேயே இருக்கும். சிட்னியிலிருந்து வரும் பொறி யாளர் அல்லது டெல்லியிலிருந்து வரும் மென்பொருள் நிபுணர் போன்றோருக்கு எதிராக ஐரோப் பிய ஒன்றிய மக்களுக்கு முன் னுரிமை வழங்கப்படாது," என்று பிரதமர் மே உறுதி தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனது திட்டத்திற்கு முழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக தலைவர்களிடம் அவர் கூறினார்.

ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் 'பிரக்சிட்' நகல் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக் கிழமை நகல் திட்டம் இறுதி செய்யப்படவிருக் கிறது. இதற்கு முன்பாக எஞ்சிய 27 ஐரோப்பிய நாடுகளின் அமைச் சர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடி ஆலோ சிக்க இருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட 585 பக்க நகல் திட்டத்தில் பிரிட்டனுக்கு சாதக பாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக நிபுணர்கள் கூறி யுள்ளனர். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தெரசா மேயை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.