போர்ட் மோஸ்பி: பாப்புவா நியூ கினியில் போலிசாரும் ராணுவ வீரர்களும் நேற்று 'ஏபெக் போனஸ்' கேட்டு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளா
கத்தில் நுழைந்த அவர்கள் அங்கிருந்த பூந்தொட்டிகளையும் அறைகலன் களையும் அடித்து நொறுக்கினர். அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் 'ஏபெக்' உச்சநிலை மாநாட்டில் முக்கிய உலகத் தலை வர்கள் கலந்துகொண்டனர். அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து பாப்புவா நியூகினி அர சாங்கம் வரவேற்றது.
இந்த மாநாடு நிறைவடைந் துள்ள நிலையில் தங்களுக்கு 'ஏபெக் போனஸ்' கொடுக்க வில்லை என்று கூறி நேற்று நாடாளுமன்ற படிக்கட்டில் நின்று ஒரு குழு முழக்கங்களை எழுப் பியது என்று காவல்துறை பேச் சாளர் டோமினிக் காகாஸ் தெரி வித்தார். இந்த விவகாரத்தை காவல் துறை கவனித்துக்கொள் வார்கள் என்றும் அவர் சொன்னார். எத்தனை வீரர்கள், காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர் என்பது குறித்து தெளி வாகத் தெரியவில்லை.
பாப்புவா நியூகினி நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு படிக்கட்டுகளில் நின்று போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையினர், வீரர்கள். படம்: ஏஎஃப்பி

