சிகாகோவில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

சிகாகோவில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

1 mins read

சிகாகோ: சிகாகோ மருத்துவ மனையில் நுழைந்த துப்பாக்கிக் காரன் ஒருவன் கண் மூடித்தனமாக சுட்டதில் இரண்டு பெண் ஊழி யர்கள், ஒரு போலிஸ் அதிகாரி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இதில் துப்பாக்கிக்காரனும் உயிரிழந்தான். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரு பெண் ஊழியர்களில் ஒருவர் மருத்துவர், மற்றொருவர் மருத்துவ உதவியாளர். போலிசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் துப் பாக்கிக்காரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் துப்பாக்கிக்காரன் தன்னைத்தானே சுட்டுக்கொண் டான் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தில் துப்பாக்கிக் காரனிடமிருந்து பாய்ந்த குண்டுக்கு இரை யாகாமல் மற் றொரு போலிஸ் அதிகாரி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

துப்பாக்கிக்காரனின் நோக்கம் பற்றி தெரியவில்லை. ஆனால் ஒரு பெண்ணை அவர்கள் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய மேயர் இம்மானுவேல், ஒரு மருத்து வர், ஒரு மருத்துவ உதவியாளர், ஒரு போலிஸ் அதிகாரியை சிகா கோ இழந்துவிட்டது," என்றார். திங்கட்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணி அளவில் சிகாகோ மெர்சி மருத்துவமனையில் துப்பாக்கிக் காரன் நுழைந்தான். உடனே ஒரு பெண்ணை நோக்கி அவன் சுட்டான். அந்தப் பெண்ணை அவனுக்கு ஏற் கெனவே தெரியும் என்று கூறப்படு கிறது. இதையடுத்து கட்டடத்துக்குள் நுழைந்த அவன் மற்றவர்களையும் சுடத் தொடங்கினான். போலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.