மெல்பர்ன்: மெல்பர்னில் பயங்கர வாதத் தாக்குதலை நடத்துவதற் காக சதித் திட்டம் தீட்டிய மூவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மக்கள் நெரிசல்மிகுந்த இடத் தில் தானியக்க துப்பாக்கியால் எத்தனை பேரை சுட்டுத் தள்ள முடியுமோ அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவது அவர்களுடைய திட்டமாக இருந்தது. சந்தேக நபர்களின் வயது 21 முதல் 30 வரையிலாகும். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டம் தீட்டியிருந்த னர்.
ஆனால் தற்போது பொது மக்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை ஆணையர் கிரஹம் ஆஷ்டன் கூறினார். இம்மாதத் தொடக்கத்தில் இதே மெல்பர்ன் நகரில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் ஒருவன் கத்தியால் தாக்கியதில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட் டார். இரண்டு பேர் காயம் அடைந் தனர். இதனை பயங்கரவாத செயலாக காவல்துறையினர் வகைப்படுத்தியிருந்தனர். தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியர்கள். இவர்களில் இருவர் சகோதரர்கள்.

