புத்ராஜெயா: பொருளியல் மேம்பாடு உட்பட பல துறைகளைப் பற்றி மலேசியாவிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மலேசியாவை உருமாற்றிய டாக்டர் மகாதீரைப் பார்த்து வியந் துள்ள இம்ரான் கான், பேராளர்கள் குழுவுடன் மலேசியா வந்துள் ளார்.
"மலேசியாவின் முன்னேற்றத் தைக் கண்காணித்து வந்துள் ளோம். உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், பொருளியல் மேம் பாடுகளை மேம்படுத்துவதில் மலேசியாவின் அனுபவங்களி லிருந்து கற்றுக்கொள்ள விரும்பு கிறோம்," என்று கோலாலம்பூரில் பேசிய இம்ரான் கான் கூறினார். "மலேசியாவில் ஊழலுக்கு எதிராக போராடி மகாதீர் வெற்றி பெற்றார். அதேபோல பாகிஸ் தானில் ஊழலுக்கு எதிராக போராடி இம்ரான் கான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் இரு நாடுகளும் பெருங்கடனை எதிர்நோக்கு கின்றன," என்று பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டார். மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நேற்று திறந்த மனதோடு பேசினர். அப்போது இரு தரப்பு உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரு தலைவர்களும் ஊழல் ஒழிப்பு, பயணத்துறை உட்பட பல துறைகள் பற்றி ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தனர். "இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால உறவு நீடிக்கிறது. நாங்கள் ஒரே மாதிரியான பிரச் சினைகளை எதிர்நோக்குகிறோம். இதற்குத் தகுந்த தீர்வுகளைக் காணத் தொடர்ந்து ஆலோ சனையில் ஈடுபடுவோம்," என்று டாக்டர் மகாதீர் சொன்னார். மேலும் பேசிய அவர், ஆசி யானின் கலந்துரையாடல் பங்காளி யாக பாகிஸ்தானையும் சேர்க்க பிரதமர் இம்ரான் கான் உதவி கேட்டுள்ளதாகவும் கூறினார்.
கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் மகாதீரைச் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். படம்: ராய்ட்டர்ஸ்

