மெல்பர்ன்: சாதாரண தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஸ்திரேலியர் ஒருவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனால் அவரது கை, கால் களைத் துண்டித்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட் டனர். கடந்த மாதம் பிலிப்பீன்சில் விடுமுறையைக் கழித்த பிறகு திரு ஜேசன் மில்லர், 48, விமானத் தில் தமது நாட்டுக்குத் திரும்பி னார். அப்போது தொண்டை எரிச்சலால் அவர் பாதிக்கப்பட்டார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்ததால் ஒற்றைப் பெற் றோரான அவர் அக்டோபர் 31ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவரை மருத்துவர்கள் பரி சோதித்தனர். மருத்துவ சோதனை களும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 'ஸ்ட்ரெப்டோகோக் கஸ்', 'ஏரோகோக்கஸ்' எனும் இரு வகை பாக்டீரியா கிருமியால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜேசன் மில்லருக்கு இரண்டு கிருமிகளும் தொற்றியிருந்ததால் அவரது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திகள் அழிந்துவிட்டன என்று மருத்துவர்கள் கூறினர்.
இரு கிருமிகள் ஒரே நேரத்தில் எப்படி அவருக்குத் தொற்றியது என்பதற்கு மருத்துவர்களிடம் விளக்கம் இல்லை. சிறுநீரகம், கல்லீரல் உட்பட பல உடல் உறுப்புகள் செயலிழந்த தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. "கை, கால்கள் கறுப்பாக மாறி விட்டன," என்று அவரது சகோதரி கூறினார்.
ஒரு கட்டத்தில் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு பத்து விழுக் காட்டுக்கும் குறைவு என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் அவரது ஏழு வயது மகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பிரியா விடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அனைத்துப் பிரச்சி னைகளிலிருந்தும் மீண்டு வந்துள்ள ஜேசன் மில்லரின் உடல் நிலை தற்போது தேறி வருகிறது. செயற்கை முறையில் தூண்டப் பட்ட கோமாவிலிருந்து ஒரு வாரத் திற்குப் பிறகு நவம்பர் 7ஆம் தேதி அவர் கண்விழித்துப் பார்த்தார்.
அவரது மூச்சும் சீராக இருந்தது. இருந்தாலும் தொற்றுக் கிருமி உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்க வேண்டுமெனில் அவரது கைகளையும் கால்களையும் துண் டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதியை அவரது குடும்பத்தினர் Gofundme.com மூலம் திரட்டி வருகின்றனர். ஐம்பதாயிரம் டாலரை திரட்டுவது அவர்களுடைய இலக்கு. ஆனால் நேற்று வரை 30,000 டாலர் சேர்ந்துவிட்டது.

