கோமோடோ பூங்காவின் நுழைவுக் கட்டணம் 50 மடங்கு அதிகரிக்கும்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள ராட்சச உடும்பு களின் தேசிய பூங்காவின் நுழைவுக் கட்டணத்தை குறைந்தது 500 யுஎஸ் டாலருக்கு அதிகரிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இது, ஐம்பது மடங்கு உயர்வாகும். கொமோடோ எனும் ராட்சச உடும்புகளை பார்க்க வேண்டுமானால் சுற்றுப் பயணிகள் அதிக கட்டணத்தை வழங்க வேண்டும் என்று அண்மையில் நிர்வாகம் கூறியது.