பயங்கரவாதிகளின் குடியுரிமையைப் பறிக்க ஆஸ்திரேலியா திட்டம்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களாக இருந்தாலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரின் குடியுரிமையைப் பறிக்க ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் யோசனை தெரிவித்துள்ளார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் ஈர்க்கப்பட்ட சிலர் அண்மையில் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்தனர். இந்த நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் குடியுரிமையைப் பறிக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.