நஜிப் ஒப்புதல்: தேசிய முன்னணி அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டனர்

நஜிப் ஒப்புதல்: தேசிய முன்னணி அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டனர்

2 mins read

ஷா ஆலம்: 1எம்டிபி நிறுவனத்தை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் முன்னைய தேசிய முன்னணி அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டனர் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். "நாட்டின் உத்திபூர்வ முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியை கண் காணிக்க வழக்கறிஞர்கள், கணக் காய்வாளர்கள், கோல்ட்மேன் சேக் குழுமம் ஆகியோரை நாங்கள் நிய மித்திருந்தோம். அதாவது முறை யான நடவடிக்கைகளை வகுத் திருந்தோம். ஆனால் அவர்கள் தங்களுடைய கடமைகளை ஆற்ற வில்லை. இதுதான் முடிவில் ஏற் பட்டுள்ளது," என்று சினார் ஹரியான் ஃபேஸ்புக் பக்கத்துக்கு அளித்த பேட்டியில் திரு நஜிப் சொன்னார். மலேசிய வர்த்தகரான ஜோ லோவின் முறைகேடுகளை முன்னைய அரசாங்கம் கண்டு பிடிக்க தவறியது ஏன் என்று திரு நஜிப் பிடம் வினவப்பட்டது.

ஜோ லோவுக்கு 1எம்டிபி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது குறித்தும் அவர் பதில் அளித்தார். "ஜோ லோவின் ஆற்றலையும் மேற்கு ஆசியாவில் பல நாடுகளில் அவருக்குள்ள தொடர்புகளையும் மதிப்பிட்ட பிறகே அவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஜோ லோவும் நாட்டை ஏமாற்றி விட்டார். இந்த வகையில் வழக்கறி ஞர்கள், உலகின் பிரபலமான கோல்ட்மேன் சேக்ஸ் வங்கி போன்றவை தங்களுடைய கடமை களை ஆற்றவில்லை.

மலேசியா வின் நலன்களை அவர்கள் பாது காக்க தவறிவிட்டனர். அப்படி இருக்கையில் நாங்கள் என்ன செய்ய முடியும். 1எம்டிபி நிறுவன நடவடிக்கைகளில் தொடர்புடைய கோல்ட் மேன் சேக்ஸ், வழக்கறிஞர் கள், கணக்காய்வாளர்கள் ஆகிய அனைவரும் 'ஏதோ தவறு நடக் கிறது' என்று அரசாங்கத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று திரு நஜிப் தெரிவித்தார். இந்நிலையில் 1எம்டிபி தொடர் பிலான 'இக்குவானிமிட்டி' உல் லாசக்கப்பலை பராமரிக்க முன் னைய அரசாங்கம் 3.5 மில்லியன் ரிங்கிட்டை செலவழித்தது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றம்சாட்டியுள்ளார்.