டிரம்ப்புக்கு நீதிபதி கண்டனம்

2 mins read
f47cab85-a727-401f-ad97-beb6bf2fc57b
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வழக்கத்திற்கு மாறாக அதிபர் டிரம்ப்பை சாடியுள் ளார். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று அதிபர் டிரம்ப்பின் குடி யேற்றக் கொள்கைக்கு எதிராக சான் ஃபிரான்சிஸ்கோ நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாக நுழையும் அகதி களுக்குத் தடை விதிக்கும் உத் தரவை அதிபர் ஒபாமா பிறப்பித் திருந்தார். இதற்கு சான் ஃபிரான் சிஸ்கோ நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

இதனால் நீதிபதி மீது பாய்ந்த அதிபர் டிரம்ப், 'ஒபாமா நீதிபதி' என்று குறிப்பிட்டு, சில ஒபாமா நீதிபதிகள் மாறுபட்ட கருத்து களைக் கொண்டுள்ளனர் என்றார். சான் ஃபிரான்சிஸ்கோ நீதிபதி முன்னைய அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் இதற்குப் பதிலடி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக முன்வந்து பேசியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அதிபரைச் சாடி னார். "ஒபாமா நீதிபதி, டிரம்ப் நீதிபதி, புஷ் நீதிபதி, கிளிண்டன் நீதிபதி என்று யாருமே இல்லை.

இதற்குப் பதிலாக தலைச்சிறந்த அர்ப்பண மிக்க தங்களால் இயன்ற அளவுக்கு சிறந்த வகையில் பணி யாற்றும் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்," என்று ஏபி செய்தி நிறுவனத்திடம் பேசிய தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் சொன்னார். அமெரிக்க அதிபரை உச்ச நீதி மன்ற நீதிபதி ஒருவர் குறை கூறுவது அரிது. ஆனால் நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளிப்படையாக அதிபரை விமர் சித்திருப்பது அதிபருக்கும் நீதித் துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலைக் காட்டுகிறது.

ஜனவரி 30ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் உரை நிகழ்த்துவதற்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சுடன் பேசிய அதிபர் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்