நஜிப் மீது இன்று மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்

1 mins read
fd73d129-32fd-4c05-bf5b-e596280121b9
-

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று மீண்டும் ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு விசார ணைக்காக சென்றார். புத்ரா ஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்கு பிற் பகல் 1.55 மணியளவில் சென்ற நஜிப்பிடம் விசாரணை நடத் தப்பட்டது. முன்னாள் கருவூல தலைமைச் செயலாளர் முகம்மது இர்வான் செரிகர் அப்துல்லாவும் நேற்று அங்கு விசாரிக்கப்பட்டார்.

இந்த இருவரும் இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுவர் என்றும் அவர்கள் மீது அரசாங்க நிதி சம்பந்தப்பட்ட பல்வேறு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது. கடந்த வாரம் விசாரணைக் காக நஜிப் இருமுறை அழைக்கப் பட்டார்.

இண்டர்நேஷனல் பெட் ரோலியம் கம்பெனி (ஐபிசி) என் னும் நிறுவனத்துக்கு 1எம்டிபி மூலம் 1.2 பில்லியனுக்கு மேற் பட்ட அமெரிக்க டாலர் வழங் கப்பட்டது தொடர்பில் அப்போது அவரிடம் விளக்கம் கேட்கப்பட் டது. இம்முறை இந்த தொகை வழங்கப்பட்ட விவகாரத்தில் அபு தாபியின் பங்கு குறித்து விசா ரிக்கப்படும் என ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும், திரு நஜிப் இன்று நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட இருப்பதால் நேற்றிரவு ஆணைய அலுவலகத்திலேயே தங்க வேண்டி இருக்கும் என்றும் அத்தகவல் குறிப்பிட்டது.

திரு நஜிப் ஏற்னெவே ஊழல், நல்ல பணத்தை கள்ளப் பணமாக மாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 32 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.