ராஜபக்சே மீது வழக்கு

2 mins read

கொழும்பு: இலங்கையின் முன் னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மீது 122 எம்பிக்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். எம்பிக்கள் தாக்கல் செய்த மனுவில் 'ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய முறையில் நியமிக்கப்பட்டனர். ராஜபக்சே பிரதமர் அலுவல கத்தை அத்துமீறி ஆக்கிரமித் துள்ளார். அவரது நியமனம் செல் லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை பிரத மராக்கினார். ஆனால் ராஜபக் சேவுக்கு பெரும்பான்மை உறுப் பினர்களின் ஆதரவு இல்லை இதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஜனவரி 5ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதனால் அதிபரின் உத்தர வுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. அவை இரண்டிலும் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதற்கிடையே நேற்று முன் தினம் இலங்கை நாடாளுமன்றத் தில் சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வுக் குழு பட்டியலை வெளி யிட்டார். மேலும் தேர்வுக்குழு நிய மனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. ராஜபக் சேவுக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில் 122 எம்பிக்கள் மஹிந்த ராஜபக்சே மீது வழக்குத் தொடுத் துள்ளனர்.2018-11-25 06:00:00 +0800