பாகிஸ்தானில் கிரிக்கெட் மோதல்; ஏழு பேர் பலி

பாகிஸ்தானில் கிரிக்கெட் மோதல்; ஏழு பேர் பலி

1 mins read

பெஷாவர்: பாகிஸ்தானில் இரு கிரிக்கெட் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. ஒருவரை ஒருவர் துப்பாக் கியால் சுட்டுக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்தனர். கைபர் பாக்துன்க்வா மாகாணத் தின் அபோதாபாத்தில் நேற்று சிறுவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடிய போது பிரச்சினை ஏற்பட்டது. இதையறிந்த சிறுவர்களின் பெற்றோர், காவல் நிலையத்தில் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண் டதால் ஏழு பேர் கொல்லப்பட்டனர். காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.