பிரான்சில் ஆர்ப்பாட்டம்

பிரான்சில் ஆர்ப்பாட்டம்

2 mins read
65d929fc-f15b-446c-845e-b4837f04f627
-

பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிசில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி யடித்தும் போலிசார் அவர்களைக் கலைக்க தீவிர முயற்சியில் ஈடு பட்டனர். இரண்டாவது வாரமாக இவ்வார இறுதியில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போலிசாரின் பாதுகாப்பு வளை யங்களை மீறி நகர மையத்தில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நோக்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் முன்னேற முயற்சி செய்தபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பல ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டதால் 3,000க்கும் மேற்பட்ட போலிசார் சம்பவ இடத் துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அடுத்தடுத்து போராட் டங்களை நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவின் தொழிற்சாலை விபத்தில் இருவர் பலி; 24 பேர் காயம் பெய்ஜிங்: சீனாவின் தொழிற் சாலையில் நிகழ்ந்த வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். ஜிலின் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் வெள்ளிக் கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பு வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீ மூண்டதில் குறைந்தது 41 வீடுகள் சேதமடைந்தன என்று நேற்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் பயங்கர வாதத் தாக்குதலாக இருக்காது என்று அவர்கள் கூறினர்.

நேற்று காலை முழுவதும் மீட்பு வேலையில் ஊழியர்கள் மும்முர மாக ஈடுபட்டனர். அந்தப் பகுதியிலிருந்த மக்க ளும் உடனடியாக வெளியேற்றப் பட்டனர். மேலும் ஏராளமான போலிசாரும் தீ அணைப்பாளர் களும் மருத்துவ ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சீனாவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த அரசு உறுதியளித் துள்ளது. சீனாவில் விதிமுறைகள் இருந் தாலும் அவற்றை முறையாக அமல் படுத்தாததால் வெடிப்பு சம்பவங்களும் இதர விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜியாங்சு நகரில் அலுமினியத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்பு ஜூலை 19ஆம் தேதி சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டதில் 19 பேர் மாண்டனர்.