உயர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் பலி

1 mins read

மாஸ்கோ: ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகிலுள்ள மக்னிடொகோர்ஸ்க் நகரில் உயர்மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கட்டடத்தில் 110 பேர் வசிப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன. கட்டடச் சிதைவுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆயினும் உதவிக்கான கூக் குரல்கள் சிதைவுகளிலிருந்து ஒலிப்பதாகக் கூறப்படுகிறது.