டாக்கா: பங்ளாதேஷின் பொதுத் தேர்தலில் பிரதமர் ஷெய்க் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 நாடாளுமன்ற இடங்களில் 288 இடங்களைத் தன் வசமாக்கி மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறது. அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி ஆறு இடங்களே பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய செயலாளர் ஹெலால் உடின் தெரிவித்தார். ஆயினும், தேர்தலில் தில்லு முல்லு நடந்திருப்பதாக எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டு கின்றனர். தேர்தல் வாக்களிப்பின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் குறைந்தது 17 பேர் மாண்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்தனர். நான்காவது முறையாக பொதுத்தேர்தலில் வாகை சூடிய திருவாட்டி ஹசினா கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பங்ளாதேஷின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
அந்நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளியல் முன்னேற்றத்திற்கும் திரு வாட்டி ஹசினா பெரும் பங்காற்றியதாக கருதப்படுகிறது. ஆயினும் அவர் ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குறை கூறுகின்றனர். மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவாமி லீச் சார்பில் போட்டியிட்ட பங்ளாதேஷ் ஒருநாள் கிரிக் கெட் அணித்தலைவர் மஷ்ராஃபே மொர்ட்டாசாவும் வெற்றி பெற்று எம்.பி ஆனார்.

