வாஷிங்டன்: அமெரிக்க ராணு வத்தை சிரியாவிலிருந்து வெளி யேற்றுவது குறித்து அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப் மறு பரிசீலனை செய்வதாக குடியரசுக் கட்சியின் செனட்டர் லின்ட்சே கிரஹம் தெரிவித்திருக்கிறார். ஈராக்கிலும் சிரியாவிலும் செயல் படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை வீழ்த்த திரு டிரம்ப் தம்மிடம் கடப்பாடு தெரிவித்ததாகத் திரு கிரஹம் கூறினார். நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின்போது திரு டிரம்ப் இவ்வாறு கூறியதாக திரு கிரஹம் தெரிவித்தார். "சிரியாவை பற்றி நாங்கள் இருவரும் பேசினோம். எனக்கு தெரியாத சில தகவல்களைத் திரு டிரம்ப் என்னிடம் கூறியபோது சிரியா விவகாரம் தொடர்பில் அவர் எடுத்த முடிவுமீது எனக்கு நம்பிக்கை வந்தது," என்று திரு கிரஹம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராணுவ மீட்பு: டிரம்ப் மறுபரிசீலனை
1 mins read

