கார்களை எரித்து, கடைகளை உடைத்து ஆர்ப்பாட்டம்

1 mins read
abc7c029-24fe-40b7-932d-7b59a3caca23
-

அதிக எண்ணிக்கையில் போலி சார் குவிக்கப்பட்டிருந்தபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்கள், தடுப்புகள் போன்றவற்றுக்குத் தீவைத்ததுடன் பாரிஸ் நகரின் பல கடைகளின் கண்ணாடிகளை உடைத்தும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். நேற்றும் லா பார்க் சுங்கச் சாவடியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். இந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக் கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அதிபருக்கு வேண் டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு களை அகற்றும் பணியில் நேற்று பலர் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோனுக்கும் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்துக்கும் எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் பிரான்ஸ் மக்கள் கடந்த நான்கு வார இறுதிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஆர்ப்பாட் டக்காரர்கள் மஞ்சள் வண்ண உடையை அணிந்திருந்தனர். பாரிஸ் மட்டுமின்றி லியோன், மார்செல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆயுதம் தாங்கிய கவச வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது 'அதிபர் பதவி விலக வேண்டும்' என்ற முழக்கத்தையும் அவர்கள் எழுப்பினர். அடுத்து வரும் நாட்களில் இந்த ஆர்ப்பாட் டத்தின் தொடர்பில் அதிபர் உரை யாற்றுவார் என்று பிரான்ஸ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மிதிவண்டி, கார்கள், தடுப்புகள் போன்றவற்றைக் கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். படம்: ராய்ட்டர்ஸ்